சடங்கார்த்தமான ஆண் கவிதைகளை மீறும் படைப்பு - குட்டி ரேவதி
பெரும்பாலான ஆண் கவிஞர்களின் படைப்புகள் சலிப்பைத் தருகின்றன , அவர்களின் தொகுப்புகள் சுய நொய்மையின் பக்கங்களாக இருக்கின்றன. அல்லது அழகியலின் உபாசகனாக இருக்கின்றன. அப்படியான அழகியலுக்கும் அவர்களின் நிலக்காட்சிக்கும் தொடர்பே இருக்காது. உயிர்வாழும் சமாதிகளான அவர்களின் கவி குருக்கள் வகுத்த எல்லைகளைத் தாண்டி ஒரு சொல் கூட வெளியேறாமல் அதையே காவல் காக்கிறார்கள். “ எங்களை அரசியல் எழுதச்சொல்லாதீர்கள் , அரசியல் எழுதுபவன் கவிஞன் அல்லன் ” என்று குழந்தைகளாகி அடம்பிடிப்பார்கள். சொற்களை உற்பத்தி செய்யாமல் , காலங்காலமாக எழுதப்பட்டதையே வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவெளிக்குள் வந்து வாள் வீசும் திராணியற்று , சுயவெளிக்குள்ளேயே சுயமைதுனம் செய்து கொள்ளும் கவிதைகளும் , கவி குருக்களின் முதுகினை சொறிந்து கொடுத்துக்கொள்ளும் கவிதைகளுமே நிறைந்து இருக்கின்றன. குறிப்பாக , மனித வாழ்வின் அறம் பற்றிய எந்தத் தன்னுணர்வும் இன்றியே சொற்களும் படிமங்களும் விரயம் செய்யப்படுகின்றன. கவிதைத்தொகுப்பின் வெளியீட்டுச் சடங்கார்த்தம் துக்கத்தைக் கொண்டாடுவதாகவே இருக்கி...